இந்தியா

முக்கிய செய்தி.. உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.. உஷார்!

Published

on

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது.

புதிய ரேஷன் அட்டை பயனாளிகளின் தகுதிகளை மாற்றுவதற்கான விதிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக ஒன்றிய, மாநில அரசுகளிடையில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.

மாநிலங்கள் அளித்த ஆலோசனைகளின் பெயரில் புதிய ரேஷன் கார்டு தகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் அவை இறுதியாகிவிடும். இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால் தகுதியான நபர்கள் மட்டுமே ரேஷன் கார்டு மூலம் பொருட்களை பெற்று பயன்பெறுவார்கள்.

இந்தியாவில் இப்போது 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கார்டுகள் மூலம் பொருட்களைப் பெற்றுப் பயன்பெற்று வருகின்றனர். அதில் புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 69 கோடி குடும்பங்கள், அதாவது 86 சதவீத ரேஷன் கார்டு பயணிகள் வருகிறார்கள். இதில் வளமான வருமானம் உள்ள பலரும் உள்ளார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் கார்டு தகுதிகளில் புதிய மாற்றங்களைச் செய்ய உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 32 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 1.5 கோடி நவர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் வெளியூர்களில், வெளி மாநிலங்களில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

புதிய ரேஷன் கார்டு தகுதி விதிகள் அமலுக்கு வந்தால், ரேஷன் கார்டு பயனாளிகள் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழக அரசு பெண்களுக்கு வழங்குவதாக இருந்த மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும், தகுதி உள்ள ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகுதிகளுக்கு ஏற்றவாறு தமிழக அரசு உதவித் தொகை குறித்து முடிவுகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version