தொழில்நுட்பம்

விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்!

Published

on

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இதுவரையில் செய்த மிகப் பெரிய முதலீடுகள் என்றால், அது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை வாங்கியதே ஆகும்.

இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த செயலிகளை பேஸ்புக் முழுமையாகக் கைப்பற்றியதை அடுத்து, சென்ற ஆண்டு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுதான் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என மூன்று தளங்களை இணைப்பது.

பேஸ்புக்கின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் விரைவில் வாட்ஸாப் மூலமாக ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் கலந்துரையாட முடியும். ஆனால் பேஸ்புக்கின் இந்த முயற்சி துவக்கக் கட்டத்தில் தான் உள்ளது. எப்போது வரும் என்று கூறமுடியாது என தகவல்கள் கூறுகின்றன.

அதன் ஒரு கட்டமாக அண்மையில் இன்ஸ்டாகிராமில் பேஸ்புக் மெசஞ்சர் இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை முயற்சியாகக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் பேசும் சேவை வர வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version