வணிகம்

விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் தலைமை அலுவலகம்!

Published

on

சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த டிக்டாக் செயலியில் தலைமை அலுவலகத்தை அமெரிக்காவுக்கு மாற்ற பைட் டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிக்டாக்  செயலியை அதன் தான் நிறுவனமான பைட் டான்ஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆரக்கிள் நிறுவனத்திடம் தரவு செமிப்பு உள்ளிட்ட குறைந்த அளவிலான பங்குகளை விற்க பைட் டான்ஸ் முடிவு செய்தது. அதே நேரம் காப்புரிமை போன்ற முக்கிய உரிமைகள் மற்றும் பெருமளவிலான பங்குகள் டிக்டாக் வசம்மே இருக்கும். இப்படி செய்வதன் மூலம் தரவு பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைக்கும் பைட் டான்ஸ் கருதியது.

விற்பனைக்கு ஒப்புக்கொண்டதை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், குறைந்த அளவிலான பங்குகளை மட்டும் விற்றுவிட்டு அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தை நிறுவுவது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது டிக்டாக் செயலி விரைவில் அமெரிக்காவில் தங்களது தலைமை அலுவலகத்தை நிறுவும் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிக்டாக் செயல்பாடுகளை நிர்வகிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version