வணிகம்

ஓசூரில் விமான எஞ்சின் உற்பத்தி.. எங்கு? எப்போது?

Published

on

தமிழ்நாட்டில் ஓசூரில் இருந்து அடுத்த சில மாதங்களில் விமான எஞ்சின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இரண்டும் 50/50 கூட்டு நிறுவனமாக இன்டர்நேஷனல் ஏரோ ஸ்பேஸ் மேன்யூஃபேக்ச்சரிங் லிமிட்டட் என்ற தொழிற்சாலையை ஓசூரில் கட்டமைத்து வருகின்றன.

இதற்காக இந்த நிறுவனம் 2022-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது.

ஓசூரில் அமைக்கப்படும் இன்டர்நேஷனல் ஏரோ ஸ்பேஸ் மேன்யூஃபேக்ச்சரிங் லிமிட்டட் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட விமான உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ, கார், லாரி, பேருந்து என்று இல்லாமல் ஒசூரில் விமானம் தயாரிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது தமிழகத்திற்கு இன்னொரு சிறப்பாக அமைந்துள்ளது.

Trending

Exit mobile version