உலகம்

விரைவில் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை செல்ல விசா தேவையில்லை..!

Published

on

இந்தியா, சீனா உட்படக் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலங்கைக்குச் சுற்றுலா பயணிகளாக வந்து செல்ல விசா தேவையில்லை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சரான ஜான் அமரதுங்கா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

இதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றை அமைத்து வருவதாகவும், இவர்கள் சுற்றுலா பயணிகளாகச் சில நாடுகளில் இருந்து வந்து செல்ல கூடிய விசா இல்லா நுழைவு முறை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதன் படி இந்தத் திட்ட நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா, சினா உட்படச் சில ஐரோப்பிய மாற்றும் மேற்கு ஆசிய நாடுகளும் இந்தத் திட்டம் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இந்த விசா முறை அக்டோபர் – நவம்பர் மற்றும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மட்டும் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இருந்த போது சுற்றுலாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்து என்றும் தற்போது சில ஆண்டுகளாக ஆசியாவின் முக்கியச் சுற்றுலா மையமாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் சுற்றுலா துறை 15.3 சதவீத உயர்வைப் பெற்றுள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 206,337 லட்சம் நபர்களும், சீனாவில் இருந்து 136,294 நபர்களும் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரும் அனைத்துச் சுற்றுலா பயணிகளுக்கும் மின்னணு பயண அனுமதி பெற வேண்டும் என்றும் ஆனால் சிங்கப்பூர், மால்தீவ்ஸ் குடியுரிமை பெற்றவர்களுக்கு மின்னணு பயண அனுமதியில் இருந்து விலக்கு அளித்து இலவச கட்டண விசா முறை அளிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version