இந்தியா

விரைவில் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் அறிமுகம்!

Published

on

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விரைவு ரயிலான வந்தே பாரத்தில், விரைவில் ஸீப்பர் கோச் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். அதில் 11 பெட்டிகள் 3 அடுக்கு ஏசி ஸ்லீப்பராக இருக்கும். 4 பெட்டிகள் 2 அடுக்கு ஏசி ஸ்லீப்பராக இருக்கும். 1 பெட்டி முதல் வகுப்பு ஏசி ஸ்லீப்பராக இருக்கும்.

இந்தியன் ரயில்வே நிர்வாகம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் மாதத்திற்கு 7 முதல் 8 வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வந்தே பாரத் ரயிலின் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான சக்கரங்கள் உக்ரைன், சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இப்போது டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் வந்தே பாரத் ரயிலின் சக்கரங்கள், இருக்கைகளைத் தயாரித்து வழங்க முன்வந்துள்ளன. எனவே விரைவில் வந்தே பாரத் ரயில் உற்பத்தி பெரும் அளவில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தென் இந்தியாவில் சென்னை – மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இதுவே இந்தியாவின் குறைந்த வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலாகும். விரைவில் இதன் வேகத்தை அதிகரிக்க ரயில் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version