சினிமா செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் சமயத்தில், பொழுதுபோக்கத் திரையரங்கம் வரவுள்ளது.
முதற்கட்டமாகச் சென்னை விமான நிலையத்தில் 5 நிவீன திரை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
விமான நிலையத்தில், இந்த திரை அரங்குகளை அமைக்கும் உரிமையை பிவிஆர் சினிமாஸ் பெற்றுள்ளது. பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சர்வதேச தரத்தில் சென்னை விமான நிலையத்தில் 5 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸை விரைவில் திறக்கும்.
மேலும் இந்த தியேட்டரில் படம் பார்க்க வெளியிலிருந்து செல்லலாம். இதற்காக பிரத்தியேக பார்க்கிங் வசதிகளும் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட உள்ள இந்த திரை அரங்குகளுக்காக பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் 15 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி, விமான நிலையத்தின் கூரை கண்ணாடி உடைந்து விழாமல் இருக்குமா?