வணிகம்

ஜியோவின் புதிய போன் அறிமுகமாக வாய்ப்பு!

Published

on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இணையதளம் இல்லாத, குரல் அழைப்புகள் மட்டும் செய்யக்கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜியோ ஃபோன், ஜியோ போன் 2 இரண்டிலும் இணையதள சேவைகள் குறிப்பாக வாட்ஸ்ஆப், ஜியோ டிவி போன்ற சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

ஆனால் ஜியோ அடுத்து அறிமுகம் செய்ய உள்ள போனில், இந்த சேவைகள் இல்லாமல் சாதாரண ஃபியூச்சர் போனாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஜியோ போன் விலை 500 ரூபாயாக இருக்கும், அறிமுக சலுகையாக 399 ரூபாய்க்கு விற்கப்படும்.

இந்த போனில் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு, ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் அழைப்புகள், பிற நெட்வொர்க்குகளுக்கு குறிப்பிட்ட அளவில் இலவச அழைப்புகள் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version