தமிழ்நாடு

விரைவில் தமிழகத்தில் வர இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம்.. எங்கு எப்போது?

Published

on

இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் விரைவில் வர உள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்த உடன் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அமைக்கப்படும் இந்தியாவின் 2-ம் ராக்கெட் ஏவுதளத்தால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு, எரிபொருள் செலவுகள் மிச்சமாகும் என கூறப்படுகிறது.

இப்போது ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகள் மீது பறந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க தென் கிழக்கு திசையிலிருந்து ராக்கெட்டுக்ளை கிழக்கு நோக்கி திருப்ப வேண்டும். ஆனால் குலசேகரன்பட்டினத்தில் இருந்து செலுத்தினால் ராக்கெட்டை திசை திருப்ப வேண்டும் என்ற அவசியம் இருக்காது என கூறப்படுகிறது. இதுவே இஸ்ரோவிற்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என கூறுகின்றனர்.

மேலும் இந்த ராக்கெட் ஏவுதளம் சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்ப அர்ப்பணிக்கப்பட்ட இடமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் மட்டுமல்லாமல் 1500 ஏக்கர் நில பரப்பில் ராக்கெட் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version