வணிகம்

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்பு.. என்ன காரணம்?

Published

on

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரம் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு 2020-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி மின்சாரம் வாகன கொள்கையை இரண்டு ஆண்டுக்கு அமலுக்குக் கொண்டு வந்தது.

இந்த மின்சார வாகன கொள்கை மூலமாகத் தமிழ்நாட்டில் எலட்ரிக் வாகனம் வாங்கும் போது சாலை வரி, வாகனப் பதிவு கட்டணத்தில் 50 முதல் 100% விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இப்போது இந்த மின்சார வாகன கொள்கை முடிவுக்கு வருவதால் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசு மின்சார வாகன கொள்கை கீழ் இந்த வரி மற்றும் பதிவு கட்டணம் விலக்கை நீட்டிக்க வேண்டும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version