வணிகம்

விரைவில் வங்கிகளுக்கு எல்லா சனிக்கிழமையும் விடுமுறை!

Published

on

விரைவில் இந்தியாவில் வங்கிகளுக்கு எல்லா சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட உள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் விரைவில் வங்கிகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் இயங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாக www.bhoomitoday.com தளத்துக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

தற்போது வங்கிகளுக்கு மாதத்திற்கு எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாவது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் விடுமுறை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருவதால், வங்கிகளுக்கு நேரடியாக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனவே வங்கி வேலை நாட்களைக் குறைக்க இந்திய வங்கிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

வங்கி சங்கங்களின் இந்த முடிவுகள் ஏற்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டால், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மட்டுமே வங்கிகள் இயங்கும்.

இதனால் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களுக்குப் பிறகு வங்கிகள் திறக்கும் போது கூட்டம் அதிகம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பல்வேறு தனியார் நிறுவனங்களில் 5 நாட்கள் வேலை இருக்கும் போது வங்கி ஊழியர்களும் நீண்ட நாட்களாக தங்களுக்கு இந்த கோரிக்கையை வைத்து வந்தனர். அது இப்போது சாத்தியமாக உள்ளது.

Trending

Exit mobile version