சினிமா செய்திகள்

கவலைக்கிடமாக இருக்கும் சிவசங்கர் மாஸ்டர்: நிதியுதவி அளிக்க முன்வந்த பிரபல நடிகர்!

Published

on

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரது சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி அளிக்க பிரபல நடிகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர்.

அஜித்தின் வரலாறு, எஸ்எஸ் ராஜமவுலியின் மகதீரா, பாகுபலி, மற்றும் அருந்ததி உள்பட பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் இருந்த சிவசங்கர் பாபா தற்போது தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா சிகிச்சைக்கு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. குறிப்பாக சிவசங்கர் பாபாவின் மகன் அஜய் கிருஷ்ணா அவர்கள் பல திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நடன இயக்குநர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்க பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version