இந்தியா

மாதம் ரூ.6000 கொரோனா நிதியுதவி: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

Published

on

இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் நலிவடைந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது. இதனை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்குகள், பகல் நேர ஊரடங்குகள் என மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன.

இதனால் ஏழை எளிய மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற நலிவடைந்த மக்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கட்சி இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு எழுப்பியது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நலிவடைந்தவர்களுக்கு பணமாக தரவில்லை என்பது ஏமாற்றத்தைக் உரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version