இந்தியா

காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் உட்கார வைக்க பிரசாந்த் கிஷோர் மெகா திட்டம்: ஒத்துழைப்பு தருமா கூட்டணி கட்சிகள்?

Published

on

காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் உட்கார வைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது என்பதும் பஞ்சாபில் ஆட்சியை இழந்தது என்பது தெரிந்ததே. ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் அந்த கட்சியை ஆட்சியில் உட்காரவைத்து தீர்வது என்ற எண்ணத்துடன் மெகா திட்டம் தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் 370 இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் உத்தரபிரதேசம் பீகார் ஒரிசா ஆகிய மாநிலங்களில் தனித்தும், தமிழ்நாடு மேற்கு வங்காளம் மகாராஷ்டிரா மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாகவும் இதற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மூத்த தலைவர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அவர்களுடைய ஒத்துழைப்பு மற்றும் அனுபவம் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாகவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில் ஒரு மெகா அணி அமைக்க பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version