இந்தியா

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு: ஸ்டாலின் கோரிக்கை ஏற்றார் சோனியா காந்தி

Published

on

அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்படுத்திய நிலையில் அந்தக் கூட்டமைப்பில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்துள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்று உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்பமொய்லி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டமைப்புக்கு தங்களது முழு ஆதரவை தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு ஏற்பட்டது. இந்த கூட்டமைப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதிய நிலையில் இந்த கடிதத்திற்கு சோனியாகாந்தி தற்போது பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டமைப்பில் இணைந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை அடுத்து மேலும் பல கட்சிகள் இந்த கூட்டமைப்பில் இணையும் என்றும் இந்த கூட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முக்கிய பங்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version