இந்தியா

நடிகை நக்மாவுக்கு புதிய பதவி: சோனியா காந்தி உத்தரவு!

Published

on

ரஜினியின் பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் அவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவி உள்பட பல்வேறு பதவிகளில் அவர் பெற்றுள்ள நிலையில் தற்போது அவருக்கு புதிய பதவி ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாய் ஜக்தாப் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மும்பை காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஆறு மூத்த தலைவர்கள், 15 துணைத் தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், 76 செயலாளர்கள் மற்றும் 30 நிர்வாக உறுப்பினர்களை நியமனம் செய்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதில் 15 துணைத் தலைவர்களில் நடிகை நக்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகை நக்மாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version