இந்தியா

சோனியா காந்திக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி!

Published

on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா: வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு சில பிரபலங்களுக்கும் கொரோனா: வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்து காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version