சினிமா செய்திகள்

ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்க சொல்றாங்க – புலம்பும் சோனியா அகர்வால்!

Published

on

காதல் கொண்டேன் படத்தில் க்யூட் ஹீரோயினாக வந்த சோனியா அகர்வால், செல்வராகவன் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்தார். பின்னர், இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், வேறு சில பிரச்னைகள் கிளம்பவே அவர்களது காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் சோனியா அகர்வாலை, 36 வயது ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க சொல்லி கேட்கிறார்களாம். தடம் படத்தில் அருண் விஜய்யின் பால்ய காட்சிகளில் அவருக்கு அம்மாவாக நடித்தற்கே ரொம்ப யோசிச்சேன். ஆனால், இப்போ, பெரிய வயது ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கூப்டுறாங்க, ரொம்ப கஷ்டமா இருக்குன்னு தனது தனிமை படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

அக்கான்னா ஓகே.. அதுக்குள்ள அம்மாவா என்ற ரியாக்‌ஷனில் இருக்கும் சோனியா அகர்வால் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படத்தில் கிளைமேக்ஸில் 2 நிமிட காட்சியில் மருத்துவராக நடித்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version