சினிமா செய்திகள்

3 மில்லியன் பார்வைகளை நெருங்கும் அகலாதே பாடல்!

Published

on

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலே பத்து லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து யூடியூபில் கலக்கி வருகிறது.

இன்று காலை 29 லட்சம் பார்வைகளை கடந்து 30 லட்சம் பார்வைகளை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ரம்மியமான ரொமாண்டிக் பாடல், அஜித் மற்றும் வித்யா பாலன் ஜோடிக்கு ஆப்டாக இருக்கிறது.

பாடலில் அஜித்தின் தோற்றம் இளமையாக மாறியிருப்பதால், வித்யா பாலன் வரும் காட்சி பிளாஷ்பேக் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவாகிறது.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா கபூர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது.

seithichurul

Trending

Exit mobile version