சினிமா செய்திகள்

இந்து அடிப்படை வாதம் போஸ்டை ஷேர் செய்து சிக்கிக் கொண்ட சோனம் கபூர்!

Published

on

நாட்டில் என்னதான் பல பிரச்சனைகள் நடந்தாலும், பிரபலங்கள் அதற்கு என்ன சொல்கிறார்கள், அவர்களை எப்படி சிக்க வைக்கலாம் என ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரபலங்கள் தங்களின் நிலை அறிந்து கருத்துக்களை பதிவிட வேண்டிய கல்வியை கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹியூமன்ஸ் ஃபார் ஹிந்துத்துவா எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த, இந்து அடிப்படைவாதமும், இஸ்லாம் அடிப்படை வாதமும் தான் மத ரீதியான பிரிவினை வாதத்தை தூண்டுவதாகவும், அதன்பேரிலேயே இரு நாட்டு மக்களும் சண்டை போட்டுக் கொள்வதாகவும், நமது வீரர்கள் உயிர் துறக்க காரணமும் இந்து அடிப்படை வாதம் தான் என்றும், ராமரின் பெயரால் பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் வீசப்படுவதாகவும், அல்லாவின் பெயரால், அந்நாட்டு குழந்தைகளின் கையில் துப்பாக்கிகள் தரப்படுவதாகவும் இரு மதங்களும் மனிதத்தை வளர்ப்பதை விடுத்து தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்ற பதிவை, பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் நடிகர் இம்ரான் கானின் மனைவியும் ஷேர் செய்துள்ளனர்.

சராசரி இந்துவும், சராசரி பாகிஸ்தானியரும் மன அளவில் மதத்தின் அடிப்படை வாதத்தால் ஒரே மாதிரி இருப்பதாக அவர் பதிவிட்ட பதிவுக்கு, இந்திய அளவில் உள்ள இந்துக்கள் தங்களது கண்டனத்தை ட்விட்டரில் ஹேஷ்டேக் சோனம் கபூர் என்பதில் பதிவிட்டு, இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

பழிவாங்கும் மனம் கொண்ட பாகிஸ்தானிய இஸ்லாமிய பயங்கரவாதிகளையும், சராசரி இந்துவையும் எப்படி ஒரே மாதிரி கருத்து உடையவர்கள் என சோனம் கபூருக்கு சரமாரி மீம்ஸ்களும், டிரோல்களும், ட்விட்டர் வசைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

Trending

Exit mobile version