டிவி

விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர்-8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நடிகையின் மகன்..!

Published

on

விஜய் டிவி-யில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை ஒருவரின் மகன் போட்டியாளர் ஆக பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவி-யில் ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 8. இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை ஒருவரின் மகன் போட்டியாளர் ஆக பங்கேற்று வரும் செய்தி தற்போது வைரலாகி வருகிறது. விஜய், அஜித், தனுஷ் உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன்.

சின்னத்திரை, வெள்ளித்திரை, மேடை நாடகங்கள் என அனைத்திலும் அசத்துபவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன். இவரது மகன் ஆதித்யா கிருஷ்ணன் தான் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆகப் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஆதித்யா கிருஷ்ணன் தனது சமுக வலைதளப் பக்கத்தில் நடிகர் கமலின் பாடல் ஒன்றை சொந்தமாகப் பாடி வெளியிட்டு இருந்தார்.

இதற்கு கமலின் தீவிர ரசிகரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து ஆதித்யா கிருஷ்ணனின் பாடலை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version