தமிழ்நாடு

தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா: சத்யபிரதா சாகு தகவல்

Published

on

தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து மேலும் கூறியதாவது: தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் என்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் அவ்வப்போது தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகளை கண்காணிப்பார்கள். ஒரு வேளை தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மொத்தம் 16 ஆயிரத்து 387 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் இருப்பார் என்றும் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு தினங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version