இந்தியா

சளி, இருமல், காய்ச்சல் மட்டுமல்ல, இந்த அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா தான்!

Published

on

சளி, காய்ச்சல், இருமல் மட்டுமல்ல மேலும் சில அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என சளி, காய்ச்ச,ல் இருமல், மூச்சு திணறல், சுவையை அறியாமல் இருத்தல் போன்றவை என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பிரபல டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கியதற்கான புதிய அறிகுறிகள் பற்றிய தெரிவித்துள்ளார்.

காது கேட்காமல் இருப்பது, இமைப்படலத்தில் ஏற்படும் அலர்ஜி, கண் எரிச்சல் அடைவது, கடுமையான களைப்பு, நாக்கு வறட்சி ஆக இருப்பது, எச்சில் ஊறுவதில் குறைபாடு, நீண்டநேர தலைவலி மற்றும் சரும கோளாறுகள் ஆகியவையும் கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வாசனை மற்றும் சுவை தெரியாமல் போகிறதோ அதேபோல் காது கேட்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் ஆனால் இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு காது கேட்காமல் இருக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

சளி, காய்ச்சல், இருமல், சுவையற்ற தன்மையோடு மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா இரண்டாவது அலையின் போது சில பேருக்கு உணவு குடல் பாதையில் கொரோனா அறிகுறிகள் தோன்றி இருந்ததாகவும் அதன் காரணமாக வயிற்றுப்போக்கு வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் புதிய அறிகுறிகள் குறித்த இந்த தகவல் பொதுமக்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Trending

Exit mobile version