தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!

Published

on

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஒருசில வாக்கு எண்ணும் மையங்களில் அடிதடியும் காமெடிகளும் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து எண்ணப்பட்டது. ஐந்தாவது சுற்று எண்ணிக்கையின் போது செல்லாத ஓட்டு சம்பந்தமாக திமுக அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகவல் மையத்துக்கு வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவந்ததையடுத்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

அதேபோல் கரூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்று தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வாக்கு எண்ணும் அறையில் போடப்பட்ட மேஜையின் வரிசையில் மாற்றி வைக்கப்பட்டதால் அதிமுக மற்றும் திமுகவை கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் தங்களிடமுள்ள பட்டியல்படி வாக்குகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் திவான்பகதூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டதால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றிபெற்றார். இதையடுத்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று காலை தபால் வாக்குகள் எண்ணுவதற்கு வாக்குப் பெட்டியில் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது. வாக்குப்பெட்டியின் சாவி தொலைந்தால் சுத்தியல் மூலமாக பூட்டை உடைத்த அதிகாரிகள் அதன்பின் வாக்குகளை எண்ணத் தொடங்கினர். இதனால் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பிரபு விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் பிரபு, இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

seithichurul

Trending

Exit mobile version