தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு சில முக்கிய தகவல்கள்1

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மார்ச் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதுபவர்கள் 40 சதவீத மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று அறிவிக்கப்படும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழ்மொழி தாளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர தேர்வு தாள்களில் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

முதல்நிலை மற்றும் மெயின் எழுத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் எழுதவேண்டும். 100 மதிப்பெண் கொண்டதாக அமைக்கப்படும் இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளுக்கான மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் மெயின் தேர்வில் மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் போன்ற தலைப்பை கொண்டதாக தேர்வு நடத்தப்படும்.

குரூப் 3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கு ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்கு தமிழ்மொழி தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும். பொது அறிவு, திறன் அறிவு, நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு ஆ பிரிவில் ஆப்ஜெக்ட்டிவ் முறையில் நடத்தப்படும். ஆனால் அ பிரிவில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஆ பிரிவு மதிப்பீடு செய்யப்படும். இவ்விரண்டு பகுதிகளின் மொத்த மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 

Trending

Exit mobile version