தமிழ்நாடு

இன்று மாலை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு? சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. இதனால் சட்டப்பேரவை கூட்டத்தில் விதி எண் 110ன் கீழ் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பதால் அதன் பின்னர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட முடியாது என்பதால் இன்றே அனைத்து அறிவிப்புகளையும் அவசரஅவசரமாக வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க்கடன்கள் ரத்து, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், விவசாயிகளுக்கு கான்க்ரீட் வீடுகள் உள்ளிட்ட பல சலுகை அறிவிப்புகள் வெளிவந்துள்ளன என்பது தெரிந்ததே

seithichurul

Trending

Exit mobile version