தமிழ்நாடு

கூரியர் அனுப்ப போகிறீர்களா? காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Published

on

கூரியர் பார்சல்களில் அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்சல் பதிவு செய்ய வரும்போது அனுப்புனர் மற்றும் பெறுநர் முகவரி முழுமையாக இருக்க வேண்டும் என்றும் அனுப்புனர் புகைப்படமும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூரியர் நிறுவனங்களில் பார்சல்களை கண்டிப்பாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்றும் அதில் போதை பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருள்கள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கூரியர் நிறுவனங்களிலும் சிசிடிவி கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதன் காட்சிகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்கும்போது வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவுரைகளைப் கூரியர் நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இந்த வழிமுறைகளை பின்பற்றாத பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version