ஆரோக்கியம்

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு!

Published

on

தினந்தோறும் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால் 3-4 மாதங்களில் மாதவிடாய் பிரச்சனை குணமாகும். தினந்தோறும் 3 வேனை சோம்பு நீரை குடித்து வந்தால் மாதவிடாய் கலத்தில் ஏற்படும் வலி குறையும். இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் பிரச்சனைகளும் குணமாகும்.

மாதவிடாய் சுழற்சி

முறையற்ற மாதவிடாய் சுழற்சியைச் சரிசெய்ய, நல்ல ஆரோக்கியமான, ஊட்டசத்து மிக்க உணவை 13-17 வயதுள்ள பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் எடையை சீராக்க வேண்டும். உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, பிராய்லர் கோழி, மிகவும் பட்டை தீட்டிய அரிசி, நூடுல்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்துள்ள பேரிட்சை,செவ்வாழை, மாதுளை பழங்களை கொடுக்கலாம்.

மாதவிடாய் கோளாறு

மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் உணவில் அதிக அளவில் வெந்தயக் கீரையைச் சேர்த்து வருவது நல்லது.

மாதவிடாயில் உடற்பயிற்சி

மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி மட்டுமல்லாது எந்த வேலைகளையும் செய்ய முடியாது. உடல் சோர்வு, வலி ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியே செல்லாமல் வீட்டில் அல்லது மாடியில் நடைப்பயிற்சி செய்யலாம். எளிமையான யோகா செய்வதன் மூலம் ஓய்வு எடுத்து செய்ய ஏற்படாமல் தடுக்க எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

பெண்களுக்கு வலியை குறைக்க

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் பொதுவான ஒன்று வயிற்றுவலி. இதற்கு காய்ந்த கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ இரண்டையும் இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும். உணவோடு தினம் 3 வேளையும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வாந்தி இருக்காது. மதிய உணவாக தயிர் சாப்பிட உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் அடங்கும்.

seithichurul

Trending

Exit mobile version