இந்தியா

இராணுவ ரகசியங்களை வாட்ஸ் ஆப்பில் பாகிஸ்தானிற்கு விற்ற அதிகாரி கைது.!

Published

on

உத்தர பிரதேசம்: இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாட்ஸ் ஆப் இல் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன் முறையைப் பயன்படுத்தி இராணுவ ரகசியம் மற்றும் ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர், இராணுவம் ரகசியங்கள் மற்றும் தகவல்களை பக்கத்து நாட்டிற்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார். இராணுவ அதிகாரிகள் அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். இராணுவ ரகசிய தகவல்களை இவர் வாட்ஸ் ஆப் மூலம் பாக்கிஸ்தான் இல் உள்ள ஐ.எஸ்.ஐ உளவுத்துறை நிறுவனத்திடம் பணத்திற்காக விற்றுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவரைக் தொடர்ந்து விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து ராணுவ வீரர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version