சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை நட்சத்திரங்களா? அட்டகாசமாக நடைபெற்ற எஸ்கே16 படபூஜை!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 படத்தின் படபூஜை இன்று நடைபெற்றது.

சிவகார்த்திகேயனின் 16வது படமான இதில், அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும், யோகிபாபு, சூரி காமெடியில் கலக்க உள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் இன்று மீண்டும் சில பெரிய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளது.

பாரதிராஜா, சமுத்திரகனி, நட்டி என்கிற நடராஜன் மற்றும் ஆர்.கே. சுரேஷ் என நடிகர்கள் பட்டாளம் நீண்டுக் கொண்டே போகிறது.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதால், இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படத்திற்கு 2.0 படத்திற்கு ஒளிப்பதிவு பண்ண இந்தியாவின் பிரபல கேமராமேன் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஆண்டனி ரூபன் இந்த படத்திற்கான எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

இவ்வளவுதானா? இன்னும் எதாவது சர்ப்ரைஸ் இருக்கிறதா சிவகார்த்திகேயன் என்றே கேட்கத் தூண்டுகிறது.

seithichurul

Trending

Exit mobile version