தமிழ்நாடு

தமிழகத்தில் பனிமூட்டம், குளிர் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் படிப்படியாக பனிமூட்டம் மற்றும் குளிர் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே மழை படிப்படியாக குறைந்து தற்போது படிப்படியாக குளிர் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும் குளிர் அதிகரிக்கும் என்றும் பல இடங்களில் பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 22ஆம் தேதி வரை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை பல பகுதிகளில் காணப்படும் இயல்பான வெப்ப நிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் குறைவாகவே தமிழகம் முழுவதும் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version