சினிமா செய்திகள்
பாஞ்சாலியாக மாறிய ஸ்நேகா!
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள குருஷேத்ரா திரைப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தர்ஷன் துரியோதனான நடித்துள்ளார். துரியோதனனை நாயகனாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கர்ணனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும், பாஞ்சாலியாக நடிகை ஸ்நேகாவும் நடித்துள்ளனர்.
மேலும் வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னட திரையுலகில் மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரிலீசாகவுள்ளது.