கிரிக்கெட்

சதமடித்த சிங்கப்பெண் மந்தனா: குவியும் பாராட்டுக்கள்!

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணி கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அபாரமாக சதம் அடித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி சர்மா 31 ரன்களில் அவுட் ஆனாலும் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மிக அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்த நிலையில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடிக்க முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார் என்பதும் 170 பந்துகளில் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 127 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய எதிரான போட்டியில் முதன்முதலாக டெஸ்ட் சதம் அடித்த சிங்கப்பெண் ஸ்மிருதி மந்தனா வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version