தொழில்நுட்பம்

உலகின் முதல் 4 கேமரா கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்.! சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018).!

Published

on

சாம்சங் நிறுவனம் நேற்று கோலாலம்பூர் இல் நடைபெற்ற தனது “4X FUN” நிகழ்ச்சியில் தனது குவாட் கேமரா ஸ்மார்ட் போன்னான சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) என்ற புது மாடல் ஸ்மார்ட் போன்னினை அறிமுகம் செய்துள்ளது.

 (Samsung Galaxy A9 -, என்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் இன் சிறப்பு என்னவென்றால் “உலகின் முதல் பின்புற ” வசதி தான். குவாட் கேமரா என்றால் நான்கு கேமரா என்பது பொருள்,

உலகின் முதல் நான்கு பின்புற கேமரா வசதியுடன் வெளியாகி இருக்கும் முதல் ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி ஏ9 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட் போன் இன் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த ஸ்மார்ட் போன் 8 ஜிபி ரேம் சேவையுடன் 6.3 இன்ச் கொண்ட 18.5:9 விகித “பிக் இன்பினிட்டி டிஸ்பிளே”யுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட் போன் இன் இந்திய விலை விபரம் நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படவில்லை. இந்திய மதிப்பின்படி ரூ.51,300 முதல் ரூ.53,700 என்ற விலையில், இந்திய சந்தையில் நவம்பர் முதல் விற்பனை செய்யப்படுமென்றும் சாம்சங் அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version