சினிமா செய்திகள்

சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளரின் இந்த அவல நிலையை பார்த்தீர்களா?

Published

on

இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஷாலின் அயோக்யா மற்றும் அதர்வாவின் 100 படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. ஜீவாவின் கீ படம் மட்டும் நெருக்கடிக்கு மத்தியில் கேடிஎம் சர்ச்சைகள் நீங்கி ரிலீசானது.

இந்நிலையில், இன்று வெளியான மற்றொரு சிறு பட்ஜெட் படமான எங்கு சென்றாய் என்னுயிரே படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.வி. பாண்டி, சென்னை ரோகிணி தியேட்டரில், தான் இயக்கிய படம் நன்றாக இருக்கும் என்றும் தயவு செய்து படத்தை பார்க்க வாருங்கள் என்றும் கெஞ்சினார்.

கீ படமாவது வெளியாகும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த ரசிகர்களிடம், என் பட டிக்கெட்டை குறைந்த விலைக்கு தருகிறேன்.. வந்து பாருங்கள் என்றார். மேலும், படம் பிடிக்கவில்லை என்றால், டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் சேர்த்தும் தருகிறேன் என்றார்.

நடிகர் சங்கம், தயாரிப்பு சங்கம் ஆகியவற்றில் தலைமை பொறுப்பில் இருக்கும் விஷாலின் படமே ரிலீஸ் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நிலையில், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நிலை எப்படி சரியாகும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிதர்சனம்.

seithichurul

Trending

Exit mobile version