சினிமா செய்திகள்

அரசியல் களத்தில் சிக்ஸர் அடிப்பாரா விமல் – களவாணி 2 ட்ரெய்லர் ரிலீஸ்!

Published

on

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது.

களவாணி முதல் பாகம் விமல் மற்றும் ஓவியாவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், களவாணி 2 படம் அவர்களுக்கு மீண்டும் வெற்றியை கொடுக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இந்த படத்தில் விமலுக்கு நண்பனாக ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் நடித்துள்ளார். அரசியல் களமாக உருவாகியுள்ள களவாணி 2 படம் விமலுக்கு மீண்டும் வெற்றிக் கதவை திறக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Trending

Exit mobile version