சினிமா செய்திகள்

எஸ்.ஜே. சூரியா நடிக்கும் புதிய படம்!

Published

on

மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூரியா புதிய படம் ஒன்றில் நடிக்கயிருக்கிறார்.

மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். தற்போது எஸ்.ஜே. சூரியாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை எஸ்.ஜே. சூரியாவே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமிபத்தில் எஸ்.ஜே. சூரியா நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அவரது அடுத்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version