சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரன்னிங் டைம் எவ்வளவு?

Published

on

பல்வேறு தடைகளுக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் அதாவது 142 நிமிடங்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. சுமார் இரண்டரை மணி நேரமே உள்ள திரைப்படம் என்பதால் சரியான அளவில் உள்ள திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ஸ்னீக்பீக் வீடியோ உள்பட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிக சிறப்பாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர். இந்த படம் வெளிவந்தால் எஸ்ஜே சூர்யா பிரபல நடிகர்கள் பட்டியலில் இணைந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version