சினிமா செய்திகள்

இந்த வார நாமினேஷனில் 6 பேர்கள்: யார் யார் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 42 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 43வது நாளாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு சுருதி மற்றும் மதுமிதா ஆகிய ஐவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷன் படலம் இன்று நடைபெற்றது.

இந்த நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டதில் இந்த வாரம் மொத்தம் ஆறு பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐக்கி பெர்ரி, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகியோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கருத்துக்களின் படி இந்த வாரம் அபினய் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய அபினய் கடைசி நேரத்தில் தப்பித்து வருகிறார் என்பதும் இதனை கமல்ஹாசனே கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாரம் அபினய் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அபினய் காப்பாற்றப்பட்டால் இமான் அண்ணாச்சி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வார கேப்டன் பதவிக்கு பிரியங்கா, நிரூப், ஐக்கி பெர்ரி மற்றும் சிபி ஆகியோர்கள் போட்டியிட்ட நிலையில் இவர்களில் யார் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version