தமிழ்நாடு

கமலஹாசன் உள்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்! அதிரடி நடவடிக்கை

Published

on

கமலஹாசன் உள்பட 6 நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் சொந்த கட்சியை சேர்ந்தவர்களே சிலர் உள்ளடி வேலை செய்வதாக புகார்கள் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக ஒரு சில நிர்வாகிகள் செயல்படுவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து அதிமுக தலைமை 6 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

முன்னாள் எம்பி ஏழுமலை, ஈஸ்வரன், சாமி நாகராஜ், ரங்கசாமி, கமலஹாசன், ஸ்ரீதர் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version