தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்க சிலையிடம் மனு கொடுத்த அரசியல் பிரபலம்!

Published

on

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என ராஜராஜ சோழன் சிலை இடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1974-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என அதிமுக, திமுக என மாறி மாறி கூறி வந்தபோதிலும் கச்சத்தீவை மீட்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் புலவஞ்சி போஸ் என்பவர் ராஜராஜ சோழன் சிலை இடம் மனு கொடுத்துள்ளார். அதன்பின்னர் புலவஞ்சி போஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மாமன்னன் ராஜராஜ சோழன் தனது ஆட்சி காலத்தில் கடல் தாண்டி தனது பேரரசை விரிவுபடுத்தினர் என்றும், உலக வரலாற்றில் அவருக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது என்றும், எனவே தான் அவரிடம் கச்சத்தீவை மீட்கக் கோரி மனு கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை கடற்படை நமது மீனவர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் கச்சத்தீவை மீட்பது ஒன்றே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version