தமிழ்நாடு

தினகரனுக்கு எதிராக கொம்பு சீவப்படும் சிவசங்கரி: விரைவில் பிரஸ் மீட்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தினகரன் பிரிந்து அமமுக ஆரம்பித்ததில் இருந்து தினகரனுக்கு ஆதரவாக பேசி வந்தவர் சிவசங்கரி. இவர் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ விவாதங்களில் வறுத்தெடுப்பதில் வல்லவர். இந்நிலையில் அவர் நேற்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சபரிமலையில் பெண்கள் செல்வதில் என்ன தவறு என்ற கருத்தில் விவாதம் செய்தார்.

தினகரன் சபரிமலை விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் சிவசங்கரி அதற்கு ஆதரவாக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரிடம் தினகரன் தரப்பில் இருந்து ஒருவர் போன் செய்து விளக்கம் கேட்டுள்ளார். அவர் தான் கட்சி சார்பாக பேசவில்லை எனவும், ஒரு வழக்கறிஞராக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்காத அவர், நீங்க எதுக்காக எங்களை கேட்காமல் விவாதத்தில் போய் இப்படி பேசினீங்க என கூற, எல்லாத்துக்கும் உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா? சுதந்திரமா எதுவும் பேசக் கூடாதா? அடிமை கட்சியா நடத்துறீங்க? என எதிர்கேள்வி கேட்டுள்ளார் சிவசங்கரி. இதையெல்லாம் தனது போனில் ரெக்கார்டு செய்து அப்படியே தினகரனுக்கு அனுப்பியிருக்கிறார் அந்த நபர். அதன் பிறகு தான் தினகரன் சிவசங்கரியை நீக்கியுள்ளார்.

இதனையடுத்து திவாகரன் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் சிவசங்கரியை தொடர்பு கொண்டு தினகரனுக்கு எதிராக நீங்கள் பிரஸ் மீட் வைத்து பேச வேண்டும், அவரது முகத்திரையை நீங்கள் கிழிக்க வேண்டும், எந்த உதவி வேண்டுமானால் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். இதற்கு ஆமோதித்த சிவசங்கரி விரைவில் பிரஸ் மீட் வைத்து தினகரனுக்கு எதிராக பேச உள்ளதாக தகவல்கள் கசிகிறது.

Trending

Exit mobile version