தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி: ஆசிரியை ஜாமின் மனுவும் தள்ளுபடி!

Published

on

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் ஒரு சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து வெளிநாடு தப்பி செல்ல முயன்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது அவர் செங்கல்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி சிவசங்கர் பாபா உதவியாக இருந்தவர் என்று கூறப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் ஜாமீன் கிடைக்காது என்ற வகையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சிவசங்கர் பாபாவின் தனி அறையில் சோதனை செய்த சிபிசிஐடி போலீசார் பல முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அவரை ஜாமீனில் வெளியே விட்டால் பல ஆதாரங்களை அவர் கலைக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய ஜாமின் மனு மனைவி ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version