டிவி

’குக் வித் கோமாளி’ பிரபலத்துடன் சிவாங்கியின் ’ரோடு ட்ரிப்’..!- வைரல் வீடியோ

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. சிவாங்கி தற்போது இன்னொரு குக் வித் கோமாளி பிரபலத்துடன் ரோடு ட்ரிப் மேற்கொண்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தனது குழந்தைத்தனமான நடவடிக்கைகளாலும் நகைசுவைகளாலும் காதல் மொழிகளாலும் தமிழக மக்களைக் கவர்ந்தவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் குக்குகளை விட கோமாளிகளே அதிகப் பிரபலமடைந்து வருகின்றனர். இந்த வகையில் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற முடியாமல் இருந்துள்ளனர் விஜய் டிவி பிரபலங்கள்.

தற்போது தளர்வுகள் இருப்பதால் உற்சாகமாக தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கி உள்ளனர். அதேபோல், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சாலை மார்க்கமாகவே புகழ் உடன் பயணம் மேற்கொண்டுள்ளார் சிவாங்கி. ‘மதுரையை நோக்கி… அண்ணனுடன்’ என சிவாங்கி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கமென்ட்டுகளில் மதுரை ரசிகர்கள் பலரும் தங்களது வீடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும், அஸ்வின் உடன் போகாமல் ஏன் அண்ணன் புகழுடன் பயணம் செய்கிறீர்கள்” என்றும் கேலியாக கமென்ட் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version