வணிகம்

சிவகாசி பட்டாசு நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ரூ.2000 கோடி நட்டம்.. காரணம் என்ன?

Published

on

இந்தியாவில் நலிந்து வரும் வரும் தொழில் துறையாக உள்ள பட்டாசு உற்பத்தி துறை இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு முதல் தேசிய தலைநகரான டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுச் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியினைக் குறைத்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் வழக்கமாகச் சிவகாசிக்கு தீபாவளியின் போது 6,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் கிடைப்பது வழக்கம். அதில் நடப்பு ஆண்டு 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் குறைந்துள்ளது.

மறு பக்கம் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்குத் தடை விதிக்காமல் சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்று மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது ஆகும்.

அது மட்டும் இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதும் ஆர்டர்கள் சரிந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதனாலும் சிவகாசிக்கு அளிக்க வேண்டிய ஆர்டர்களைப் பட்டாசு டீலர்கள் குறைத்துள்ளதாகவும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version