வணிகம்

சிவகாசி பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு கிட்டத்தட்ட 40% சரிவு.. என்ன காரணம்?

Published

on

சிவகாசி பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுசூசலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இரசாயண பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது. பொதுவாகத் தமிழ்நாட்டின் சிவகாசியில் பேரியம் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இப்போது பேரியம் பட்டாசுகளுக்குத் தடை உள்ளதால் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு பயன்படுத்தி பட்டாசு உற்பத்தியைச் சிவகாசியில் செய்து வருகிறார்கள்.

இது விலை அதிகம் என்பது மட்டுமல்லாமல் , இந்தியாவில் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு கிடைப்பதில்லை. இறக்குமதி மட்டுமே செய்யப்பட்டு வருகின்றனர். என முன்பு இருந்ததை விட பட்டாசு விலையும் அதிகரித்துள்ளது.

சிவகாசி பட்டாசு விலை உயர்ந்ததும் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version