சினிமா செய்திகள்
டப்பிங்கிற்கும் பூஜை போட்ட சிவகார்த்தியேன் புரொடக்ஷன்
![prod1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/prod1.jpg)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் யூடியூப் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ரியோ நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங்கிற்கு வந்துள்ளது.
பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது தான் பூஜை போடப்படும், ஆனால், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவாகி வரும் ரியோ நாயகனாக நடிக்கும் படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ், கையில் பூஜை பிரசாதங்களான ஆப்பிள் மற்றும் பழங்கள் நிறைந்த தட்டுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், பிளாக்ஷிப் குழு இயக்கத்தில் உருவாகும் ரியோவின் புதிய படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.