விமர்சனம்

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ திரை விமர்சனம்!

Published

on

பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இமான் என மூவரும் இணையும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் இடையே பெறும் எதிர்பார்ப்பு நிலவியது. அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஜோடி சம்ந்தா, வில்லி சிம்ரன், அப்பா நெப்போலியன் என்றதும் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் இடையே மேலும் அதிகரித்தது. இந்த எதிர்பார்ப்பினை எல்லாம் சீமராஜா பூர்த்திச் செய்ததா இல்லையா என்று இங்குப் பார்க்கலாம்.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ராஜ குடும்பத்தினைச் சேர்ந்தவர் சிவா,வழக்கம் போல அவருடன் வெட்டியாகச் சுற்றி வரும் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் கிராமத்து நகைச்சுவைகளை நம்பி கதைகளை உருவாக்கி வந்த பொன்ராம் இந்தப் படத்தில் கூடுதலாக வசனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை அள்ளித் தெளித்துள்ளார்.

வாழ்ந்து கெட்ட ராஜ குடும்பமாக இருந்தாலும் இன்றளவும் நெப்போலியனை ராஜாவாகக் கொண்டாடும் ஊர் மக்கள். அவருக்கு இணையான மரியாதை சிவாவுக்கும் கிடைக்கிறது. சிவாவின் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஒரு சந்தையினை உரிமை கொண்டாடுவதில் பிரச்சனை.

ஊருக்குள் வெட்டியாகச் சுற்றி வரும் சிவாவுக்குச் சமந்தாவை கண்ட உடன் காதல். அதற்கு இடையில் சந்தை பிரசைக்காகப் போராடி விவசாயம் உள்ளிட்ட வசனங்களை எல்லாம் பேசுகிறார். சந்தைப் பிரச்சனை மட்டும் இல்லாமல் சமந்தாவையும் கவருகிறார்.

இருவருக்கும் இடையில் காதல் ஆனால் சமந்தாவின் அப்பாவிற்கும், சிவாவுக்கும் சந்தை பிரச்சனையால் எதிரிகள். மறு பக்கம் சமந்தாவீன் தந்தையும், சிம்ரனும் சேர்ந்து ஊர் மக்களுக்கு நெப்போலியன் அளித்த நிலங்களை ஆசைகாட்டி மோசம் செய்ய அவமானத்தில் இறந்து விடுகிறார்.

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சிவா எவ்வாறு கையாண்டார், கடைசியில் வெற்றி பெற்றாரா இல்லையா, காதல் என்ன ஆனது. இதற்கிடையில் பாகுபலி போன்று இல்லை என்றாலும் நம்பும் படியான ராஜா கதை பிளாஷ்பாக். ஆனால் கதைக்கு ஒட்டவில்லை. முத்துப் படத்தினை நினைவுபடுத்துகிறது.

சிவா, சமந்தா, நெப்போலியன் உள்ளிட்டோர் தங்கள் கதாப்பாத்திரத்தினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால் சிம்ரன் இந்தக் கதைக்குத் தேவைதானா, ஏன் இவ்வளவு ஓவர் ஆக்டிங் என்று நினைக்கத் தோன்றுகிறது. சூரியின் நகைச்சுவையும் பெரியதாகக் கவரவில்லை.

இமானின் இசை எப்போதும் போல இருப்பதால் அலுப்புத் தட்டுகிறது. மீண்டும் புதிய வகையை இமான் பிடிக்க வேண்டும். ஓவரான வசனங்கள் என்றாலும் சில இடங்கள் பரவாயில்லை ரகம். பொன்ராம் பாடத்தினைப் பிரம்மாண்டமாக அளிக்க வேண்டும் என்பதில் செலுத்திய கவனத்தினைக் கதை, திரைக்கதை, நடிகர்கள் தேர்வு மற்றும் நகைச்சுவையில் செலுத்தியிருக்கலாம்.

ஆக மொத்தத்தில் சீமராஜா திரைப்படத்தினை எதிர்பார்ப்புகள் இன்று சென்று ஒரு முறை பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version