சினிமா செய்திகள்

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்!

Published

on

ராஜேஷ் எம். இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

கே.இ. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை பிரபல வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி வாங்கியுள்ளது. மேலும், படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு விடுமுறை என்பதால், அந்த தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் குறிவைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதன் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

Trending

Exit mobile version