சினிமா செய்திகள்

மயக்கவைக்கும் சிவகார்த்திகேயனின் மைலாஞ்சி பாடல்!

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிளான மைலாஞ்சி பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளதே இதற்கு காரணம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு இம்மானுவேல் தமிழ் திரைக்கு புதுவரவாக வந்துள்ளதும், லிரிக் வீடியோவின் இடையே அவரது காட்சிகள் வருவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

எங்க அண்ணன் பாடலை தொடர்ந்து மைலாஞ்சி பாடலும் இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதங்கள் பெரிய பெரிய படங்கள் ஒன்றுக்கொன்று மோத உள்ளதால், செப்டம்பரில் சிவகார்த்திகேயன் படம் வெளியானால் நல்ல ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version